Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Wednesday, 9 October 2013
தமிழுக்கு இது வசந்த காலம்!
ஆமாங்க.....
முத்தமிழ் தோன்றிய காலத்திலருந்து தமிழ் மொழிக்கு எல்லைன்னு எதுவுமே இல்லாம உலகம் முழுசும் கொடி கட்டிப் பறக்கற காலம் இது.
சில பிரபல பதிவாளர்கள் அவங்க ப்ளாகுகள்ல வச்சிருக்கற வாசகர் பட்டியல பார்த்தா அவங்க பதிவுகள படிக்கறவங்க இல்லாத நாடே இல்லேன்னு சொல்ற அளவுக்கு உலகத்தோட அஞ்சி கண்டங்கள்லருந்தும் வாசகர்கள் வந்து படிச்சிட்டு போறாங்க..
அப்படீன்னா இது நம்ம தமிழ் மொழிக்கு ஒரு வசந்த காலம்தானே.
அதனால என்னுடைய ப்ளாகுக்கு 'வசந்தம்'னு பேர் வச்சா என்னன்னு நினைச்சேன்...
இத நா பொழுதுபோக்காத்தான் துவங்குறேன்னாலும் இன்னைக்கி கொஞ்சம், கொஞ்சமா தமிழ்மண திர்ட்டிய ஆக்கிரமிச்சிக்கிட்டு வர மொக்கை பதிவுகள்ல ஒன்னா நிச்சயம் இருக்காதுங்க...
நான் பாக்கற நல்ல விஷயங்கள மட்டுமே எழுதணும்னு நினைக்கேன். நிறைய பேர் படிச்சி ஓட்டு போடணும்னோ இல்ல இன்றைய சூடான இடுகை பட்டியல்ல வரணும்னோ எழுதப் போறதில்ல. அதே மாதிரி பேருக்கு இடுகைகள்ல முழுசா படிக்காமயே ரொம்ப நல்லாருக்கு, வாழ்த்துக்கள்னு போறபோக்குல சொல்லிட்டு போற கருத்துரைகளைப் பத்தியும் கவலைபடாம உருப்படியான விஷயங்கள மட்டுமே சொல்லப் போற பதிவாருக்கணும்னு நினைக்கேன்...
அதே மாதிரி இலக்கண சுத்தமா எழுதணும்கற எண்ணமும் இல்லை. எந்த நடையில எழுதறோம்கறத விட எதப்பத்தி எழுதறோம்கறதுதான் முக்கியம்னு நினைக்கிறேன்...
இதப்பத்தித்தான் எழுதணும்னும் ஒரு வட்டத்தப் போட்டுட்டு அதுக்குள்ளவே மாட்டிக்கிட்டும் முழிக்கப் போறதில்லை.... அதே மாதிரி தினமும் எதையாவது எழுதித் தொலைக்கணுமேன்னும் எழுதப் போறதில்லை....
எப்பப்போ என்ன தோனுதோ அத எப்பப்போ நேரம் கிடைக்கிதோ எழுதணும்னு நினைச்சிருக்கேன்...
அத்தோட நிறுத்திக்காம மத்தவங்க எழுதறதையும் படிச்சி நல்ல பதிவுன்னு நா நினைக்கறதுல மட்டும் கருத்துரை போடலாம்னும் நினைச்சிருக்கேன்.
நினைப்பு நல்லாத்தான் இருக்குன்னு சிலர் சொல்றது காதுல விழுதுங்க.... நடக்கறதும் நல்லாவே இருக்கணுங்கற ஆசையோட இத்தோட நிறுத்திக்கறேன்....
நாளையோ அல்லது அதற்கு அடுத்த நாளோ அடுத்த இடுகையில உங்கள சந்திக்கிறேன்...
அன்புடன்,
வசந்தன்.
Subscribe to:
Posts (Atom)